நாடகக் காதலை தடுக்க சிறப்பு சட்டம் கொண்டுவர வேண்டும் .

நாடகக் காதலை தடுக்க சிறப்பு சட்டம் கொண்டுவர வேண்டும் இதில் பெற்றோர்கள் ஒப்புதல் இல்லாமல் திருமணம் பதிவு செய்யக்கூடாது…
ஆணவ கொலைகளை தடுக்க சிறப்பு சட்டம் கொண்டு வர வேண்டும் என்று பட்டியலின தலைவர்கள் தொடர்ந்து மத்திய மாநில அரசுகளை வலியுறுத்தி வருகின்றனர். குறிப்பாக தமிழகத்திற்கு குடியேறிய தலைவர்கள் இதை செய்கின்றனர். இவர்கள் பின்னாடி நமது பூர்வீக பட்டியல் இன மக்கள் செல்கின்றனர்.
இந்த சட்டத்தை நமது பூர்வீக தமிழர் கட்சி வரவேற்கிறது இந்த சட்டம் ஒரு சாதிக்கு மட்டும் இல்லாமல் அனைத்து சாதிகளுக்கும் பொதுவாக இருக்க வேண்டும் என்பதுதான் எங்கள் கோரிக்கை!!
ஆணவக் கொலைக்கு தனிச்சட்டம் வேண்டும் என்றால் நாடக காதல், ஆணவ காதலை தடுக்க சிறப்பு சட்டம் கொண்டு வரவேண்டும்.. என்று பூர்வீக தமிழர் கட்சி கோரிக்கை வைக்கிறது
இன்று பெண் பிள்ளைகளை நம்பி பள்ளிக்கூடம்,கல்லூரிகள் மற்றும் வேலைக்கு அனுப்ப முடியவில்லை எப்போது என்ன நடக்கும் என்று யாருக்கும் தெரியாது பெற்றோர்களுக்கு திகிலாகவே உள்ளார்கள்.
இன்று தமிழகத்திற்கு குடியேறிய கபோதி தலைவர்கள் திராவிடம் என்ற பெயரில் ஒரு குடையில் ஒளிந்து கொண்டு சமூக நீதி என்ற பெயரில் கலப்புத் திருமணம் செய்ய உயர் ஜாதி பெண்கள் மற்றும் பணக்கார பெண்களை குறி வைத்து காதல் வலை விரித்து வருகின்றனர் அதில் அப்பாவி பெண்களை மூளையை சலவை செய்து வெற்றி பெறுகின்றனர் பெண்களின் பெற்றோர்களுக்கு தெரியாமல் சில திராவிட குறிப்புகள் பதிவு திருமணம் செய்து வைக்கிறார்கள். இதை வைத்து பணம் பறிப்பது தொடர்கதையாக உள்ளது. மேலும் காதலிக்க மறுக்கும் பெண்கள் மீது கொடூர தாக்குதல் நடைபெற்று வருகிறது.
இது உண்மை நீங்கள் வேண்டுமானால் சென்னை பெரியமேடு சார் பதிவாளர் அலுவலகத்தில் ஒரு நாளைக்கு எவ்வளவு திருமணங்கள் பெற்றோர்களுக்கு தெரியாமல் பதிவு செய்யப்படுகிறது என்பதை நேரில் சென்று பாருங்கள்.
இதை தடுப்பதற்கு சிறப்பு சட்டம் வேண்டும் என்று கேட்கிறோம் இந்த சட்டத்தில் பெற்றோர்களுக்கு தெரியாமல் திருமணங்கள் பதிவு செய்யக்கூடாது என்ற கருத்தினை கொண்டுவர வேண்டும். இந்த சட்டம் அனைத்து அனைத்து குடிகளுக்கும் பொருந்தும் வகையில் அமைய வேண்டும்.